வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (11:12 IST)

காரில் கஞ்சா கடத்தல்.! போலீசாரிடம் வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்..!!

kanja arrest
சீர்காழி அருகே காரில் கஞ்சா கடத்திய  2 பேரை  தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த  கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே, ரகசிய தகவலின் பேரில் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர்  மணிகண்ட கணேஷ் தலைமையிலான  தனிப்படை போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனையிட்டபோது, காரினுள் ஒன்னேகால் கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, காரிலிருந்த கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேவுள்ள வல்லம்படுகை  மெயின் ரோடு பகுதியை  சேர்ந்த நவீன்(23), ரோட்டரி நகரைச் சேர்ந்த விக்னேஷ்(27) ஆகிய 2 பேரையும் பிடித்து சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, விசாரணைக்கு பின்னர் சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.