திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 16 நவம்பர் 2022 (15:00 IST)

திருமணம் செய்ய வந்து ஏமாந்து திரும்பிய 13,750 ஆண்கள்!

marriage1
நவீன சுயம்வரம்: 250 பெண்களை திருமணம் செய்ய குவிந்த 14,000 ஆண்கள்!
கர்நாடக மாநிலத்தில் நடந்த நவீன சுயம்வரம் நிகழ்ச்சியில் 250 பெண்களை திருமணம் செய்ய 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருமணத்திற்கு வரன் பார்க்கும் நவீன சுயம்வரம் நடத்தப்படும் என்பதும் இதில் திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள் ஆண்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் 250 பெண்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்த நிலையில் திருமணத்திற்காக 14,000 ஆண்கள் வந்து இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இதில் கலந்துகொண்ட 250 பெண்களுக்கும் வரன் அமைந்து விட்டதாகவும் மீதமுள்ள 13,750 இளைஞர்கள் மணப்பெண் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் கூறப்படுகிறது 
 
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வுகளிலிருந்து திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தவித்து வருகிறது தெரியவந்துள்ளது.
 
Edited by Mahendran