வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 மார்ச் 2018 (11:56 IST)

நச்சுத்தன்மை வாய்ந்த குடிநீர் குடித்த 14 பேர் பலி

மகாராஷ்டரா மாநிலத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த குடிநீரை குடித்து 14 பேர் பலியாகி உள்ளதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
மகாராஷ்டரா மாநிலத்தில் உள்ள யவத்மால் கிராம மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக அங்குள்ள ஆழ்துளை போர்வெல் பைப்பில் வரும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பைப்பில் வரும் தண்ணீரில் நச்சுத்தன்மை உள்ளதால் இதை குடித்த மக்கள் 14 பேர் பலியாகியுள்ளனர், 38 பேர் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் போராடி கொண்டிருக்கின்றனர். மேலும், 110க்கும் மேற்பட்டோர் சிறுநீரகம் கோளாரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அந்த தண்ணீர் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்ததாவது, அந்த கிராம மக்கள் குடித்த தண்ணீரில் நச்சுத்தன்மை வாய்ந்த நைட்ரேட் கலந்துள்ளதால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக பல முறை அந்த கிராம மக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.