திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 டிசம்பர் 2017 (11:24 IST)

தாயை கொலை செய்த 12 வயது மகள்

தாயை கழுத்தை நெரித்து கொன்ற 12 வயது மகளை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பத்தீபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி கம்ரூல் நிஷா. திருமணமாகி பல நாட்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் 12 வருடத்திற்கு முன்பு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். முஹமது மும்பையில் வேலை செய்து வரும் நிலையில், அவரது மனைவியும் வளர்ப்பு மகளும் பத்திபூரில் தனியாக வசித்து வந்தனர்.
 
மகள் பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் வைத்துக்கொண்டு, ஊர்சுற்றியதால் அவரை தாய் கம்ரூல் நிஷா கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகள் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து தனது வளர்ப்பு தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் நிஷாவின் உடலை கைபற்றி, வளர்ப்பு மகளை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.