திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (21:22 IST)

10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!

மஹாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான  அதிருப்தி சிவசேனா குழு ஆட்சி நடந்து வருகிறது.

இம் மாநில கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதில்,  12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி  மாதம் 21 ஆம் தேதி தொடங்கி மார்ச் 20 ஆம் தேதி வரை நடக்கிறது.

10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வ்ரை நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளது.

மேலும் பொதுத்தேர்வு தொடர்பான அட்டவணை கல்வி வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.