திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2016 (16:54 IST)

5 மாதங்களில் 1,012 பாலியல் பலாத்கார வழக்குகள் - அதிரும் மாநிலம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 5 மாதங்களில் மட்டும் 1,012 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
 

 
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 1,012 பாலியல் பலாத்கார வழக்குகளும், 520 பாலியல் தொல்லை வழக்குகளும் பதிவாகி உள்ளது என்பதை அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
 
இது குறித்து மாநில சட்டசபையில் பாரதீய ஜனதா உறுப்பினர் சதிஷ் மகானா எழுப்பிய கேள்விக்கு சமாஜ்வாடி அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
 
அதில், “மார்ச் 15, 2016 முதல் இம்மாதம் வரையில் 1,012 பாலியல் பலாத்கார வழக்குகள், 4,520 பாலியல் தொந்தரவு வழக்குகள், 1,386 கொள்ளை வழக்குகள் மற்றும் 86 வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.