வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜூன் 2024 (18:14 IST)

பாஜக கூட்டணிக்கு மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு.. சுயேட்சை, சிறு கட்சி தலைவர்கள் சந்திப்பு..!

மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்பிக்கள் தேவை என்ற நிலையில் தற்போது பாஜக கூட்டணிக்கு 293 எம்பிகள் இருப்பதால் ஆட்சி அமைக்க எந்தவித பிரச்சனையும் இல்லை என்ற நிலையில் தற்போது மேலும் 10 எம்பிக்கள் ஆதரவு தந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நேற்று காலை முதல் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் பாஜக கூட்டணிக்கு 293 எம்பிகளும், இந்தியா கூட்டணிக்கு 203 எம்பிகளும் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சியை சேர்ந்த 10 எம்பிக்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தந்திருப்பதாகவும் அவர்கள் பாஜகவின் முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
இதை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சிக்கு 303 எம்பிக்கள் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்றும் மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி தான் பதவி ஏற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
Edited by Mahendran