1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 21 மே 2018 (13:11 IST)

சுற்றுலாக்கு சென்று கொண்டிருந்த பஸ் விபத்து- 10 பேர் பலி

மத்திய பிரதேசம் அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து அகமதாபாத்துக்கு தனியார் பேருந்தின் மூலம் பலர் சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்து மத்திய பிரேதசம் மாநிலம் குணா மாவட்டத்திற்கு வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
 
இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாலை விழிப்புணர்வு இல்லாமல் வாகனம் ஓட்டுவதால் இது போன்ற விபத்துகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.