புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 26 பிப்ரவரி 2020 (18:06 IST)

வன்முறையில் இறந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்- அரவிந்த் கெஜ்ரிவால்

ரத்தன் லால் குடும்பத்துக்கு 1 கோடி : அரவிந்த் கெஜ்ரிவால்

வட கிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
வன்முறையை கட்டுபடுத்த காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த வன்முறையில் இறந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும் ரத்தன் லால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.