டெல்லி கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்று! – சோனியா காந்தி குற்றச்சாட்டு!

sonia gandhi
Prasanth Karthick| Last Modified புதன், 26 பிப்ரவரி 2020 (14:55 IST)
டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என சோனியா காந்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கட்சி சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி “டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வருத்தமளிக்கிறது. இது ஒரு அரசியல் சூழ்ச்சி. இந்த வன்முறை சம்பவம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. தேர்தலுக்கு பிறகு வேண்டுமென்றே இந்த சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ”டெல்லியில் நடந்த இந்த கலவரத்திற்கு மத்திய அரசும், உள்துறையும் பொறுப்பேற்க வேண்டும். டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :