இந்தியாவில் புதியவகை ஒமிக்ரான்: 6 குழந்தைகள் பாதிப்பு!
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு விதங்களில் உருமாறி பரவி வரும் நிலையில் புதிதாக கடந்த சில மாதங்களாக ஒமிக்ரான் என்ற வைரஸ் பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது இந்தியாவில் திடீரென ஒமிக்ரான் வைரஸ் புதிய வகையில் உருமாறி பரவி வருவது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
பி.ஏ 2 என்ற புதிய வகையில் ஒமிக்ரான் உருமாறி இருப்பதாகவும் இந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் மத்திய பிரதேசத்தில் உள்ள 6 குழந்தைகள் உள்பட 21 பேர்களை பாதித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
புதிய வகை ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் அவர்கள் குணம் ஆவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது
ஒமிக்ரான் வைரஸ் திடீரென புதிய வகையாக உருமாறி இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது