செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (10:42 IST)

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

கே.சி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பொழிக்கரையான்.க இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்"நானும் ஒரு அழகி"
 
இத் திரைப்படத்தில் அருண்,
மேக்னா, ராஜதுரை,சிவசக்தி, சுபராமன்,ஸ்டெல்லா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் நாயகி  மேக்னா அம்மாவுடன் வசித்து வருகிறார்.
 
இதே கிராமத்தில் வசிக்கும் நாயாகி மேக்னாவின் அத்தை மகனான நாயகன் அருண் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டே கிடைக்கும்
நேரத்தில் கிராமத்தில்  விவசாயம் செய்து வருகிறார்.
 
அது மட்டுமின்றி தனது கிராமத்தில் உள்ள  மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் மற்றும் டியூசன் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
 
கல்லூரியில் படித்து வரும்  நாயகி மேக்னாவிற்கு படிப்பு சுத்தமாக  வராத காரணத்தால் தன்னுடன்  படிக்கும் மாணவிகள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்.
 
இந் நிலையில் மேக்னாவின் அம்மா தனது மருமகன் அருணிடம் டியுசன் போக சொல்ல ஆரம்பத்தில் மறுத்த மேக்னா வேறு வழியின்றி செல்கிறாள்.
 
அத்தை மகனான அருண் நாயகி மேக்னாவிற்கு  டியூசன் சொல்லி கொடுத்து  கல்லூரியில் முதல் இடத்தை பிடிக்க வைத்து  விடுகிறார்.
செய்தித்தாளிலும் வந்து விடுகிறாள் மேக்னா.
 
ஊர் மக்கள் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
 
சந்தோஷமடைந்த மேக்னா  தனது அத்தை மகன் அருணை காதலிக்க ஆரம்பிக்கிறாள் தன் காதலை சொல்ல பல முறை முயற்சி செய்தும் முடியவில்லை.
 
அதே சமயம் நாயகனும் நாயகி மீது காதல் வர தன்  காதல் குறித்து  நாயகியிடம் சொல்வதற்குள்  வேலை  விஷயமாக வெளி ஊர் செல்கிறார். 
 
திரும்பி வந்து பார்த்தால் நாயகி மேக்னாவிற்கு  வேறு ஒருவருடன் திருமணம் நடந்து முடிகிறது.
 
திருமணம் முடிந்து குழந்தை இல்லாமல் இருக்கும் மேக்னா குடும்பத்தில் அடிக்கடி சண்டை.
ஒரு கட்டத்தில் அது முற்றி வீட்டை விட்டு துறத்தி விடுகிறார் மேக்னா கணவர்.
 
தனது தாய் வீட்டிற்கு  பேருந்தில் செல்லும் மேக்னா தனது பக்கத்து சீட்டில் எதிர் பாரத விதமாக தான் ஆசையாக காதலித்த அத்தை மகனை சந்திக்கிறாள்.
 
நடந்த விஷயத்தை அருணிடம் கூற அருண் ஆறுதல் கூறுகிறார்.
 
இந் நிலையில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்க அருண் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள் மேக்னா தான் மலடி என்று தன்னை துறத்திய கணவன்....
தான் மலடி இல்லை என்று சந்தோஷப்படுவதா?
 
திருமணம் ஆகாத மச்சானுடன் தப்பான உறவு என்று ஊர் மக்கள் பேசுவார்கள் இதனால் மச்சான் பெயருக்கு இழுக்கு  வந்து விட கூடாது  என்று குழந்தையை கலைக்க முயற்ச்சி செய்கிறாள்.
 
இதை தடுக்கிறார் அத்தை மகன் அருண்.
 
குழந்தை பிறந்ததா? மேக்னா கணவர் விஷயம் தெரிந்து என்ன செய்தார்? அருண் நிலைமை என்ன? திருமணம் முடிந்து தனது அத்தை மகனின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் மேக்னா நிலைமை என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை..
 
காதல்,கணவன் மனைவி உறவு, குழந்தை செல்வம் என அனைத்தையும் மையமாக  வைத்து  ஒரு அழகான கிராமத்து கதையை  உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்  பொழிக்கரையான்.க
 
இந்த படத்தில் குழந்தை  இல்லாததிற்கு மனைவி மட்டும் காரணம் இல்லை அதில் இருவருக்கும் சம பங்கு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். 
 
மேக்னா தனது  கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.  அத்தை மகனிடம் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பது குழந்தை செல்வத்திற்காக ஏங்குவது என நடிப்பால் அசத்தியுள்ளார்.
 
கதைநாயகனாக நடித்திருக்கும் அருண் கிராமத்து இளைஞர் தோற்றம் சரியாக அமைந்துள்ளது. ஆனால்  சரியான அளவிற்கு நடிப்பு இல்லை.
 
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜதுரை நடிப்பு அருமை.
 
இசை மாற்றும்  பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.பின்னணி  இசை சுமாரக உள்ளது.
 
ஒளிப்பதிவாளர் மகிபாலன் கேமரா கண்கள் சேர்மாதேவி மற்றும் அதை சுற்றி உள்ள விவசாய நிலங்களை  அழகாக படம் பிடித்துள்ளது.
 
 மொத்தத்தில் ஒரு பெண்ணின் துணிச்சல்"நானும் ஒரு அழகி"