புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (06:51 IST)

’புஷ்பா’ படம் எப்படி இருக்குது? டுவிட்டர் விமர்சனங்கள்

அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இரவே அமெரிக்காவில் வெளியாகிவிட்டது. 
 
இந்த படத்தை பார்த்த அமெரிக்க ரசிகர்கள் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர். 
 
அல்லுர் அர்ஜூன் ரசிகர்களுக்கு சரியான விருந்து என்றும் ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்றும் அல்லு அர்ஜுன் நடிப்பு வித்தியாசமாகவும் இதுவரை இல்லாத அளவில் இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
ராஷ்மிகா மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரது கேரக்டர்கள் பெரிதாக கவனிக்கப்படவில்லை என்றும் கூறிய டுவிட்டர் ரசிகர்கள் பாடல்கள் அனைத்துமே சூப்பர் என்றும் குறிப்பாக சமந்தாவின் பாடல்கள் பாடலுக்கு தியேட்டரே எழுந்து ஆடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்
 
சில காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது என்றும் இருப்பினும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றும் அதேபோல் படத்தின் நீளம் அதிகம் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர் 
 
மொத்தத்தில் ரசிகர்களுக்கு சரியான விருந்து என்றும் நடுநிலை ரசிகர்களுக்கு சுமாரான படம் என்றும் ட்விட்டர்வாசிகள் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.