1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (17:59 IST)

தனி விமானத்தில் ஜாலி பண்ணும் புஷ்பா டீம்!

அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் தனி விமானம் மூலம் சென்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 

 
தெலுங்கு ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து சுகுமார் இயக்கியுள்ள படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சில முன்னதாக வெளியாகி வைரலானது. 
 
புஷ்பா திரைப்படம் நாளை உலகம் முழுவதம் ரிலீசாக இருக்கும் நிலையில் இதனையொட்டி படக் குழுவினர் ஐந்து மாநிலங்களிலும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் தனி விமானம் மூலம் மும்பையில் நடக்கும் செய்தியாளர் சந்திப்புக்கு சென்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 
 
புஷ்பா திரைப்படம் நாளை உலகம் முழுவதம் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு சென்சார் சான்றிதழ் மட்டுமே தற்போது படக்குழுவினர்களுக்கு கிடைத்துள்ளது. தமிழ் மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இந்த நான்கு மொழிகளிலும் ரிலீஸ் செய்து ஒரு வாரம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.