செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By siva
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (12:59 IST)

சென்னை வடபழனி பகுதியில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

சென்னை வடபழனி பகுதியில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் ஏற்கனவே முதல்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்தபோது வருடக்கணக்கில் அண்ணாசாலை உள்பட பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை வடபழனி முதல் பவர்ஹவுஸ் வரை ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விபரம் பின்வருமாறு:
 
 
1. போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு, போக்குவரத்தில் மாற்றம் ஏதுமில்லை.  
 
2. கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் / கோயம்பேடு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி 2வது அவென்யூ சாலை வழியாக 100 அடி சாலை சந்திப்பு வரை சென்று நேராக P.T. ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடி சாலை / வன்னியர் சாலை வழியாக ஆற்காடு சாலையை அடையலாம்.
 
3. கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி 2வது அவென்யூ சாலை, 100 அடி சாலை வழியாக சென்று வடபழனி சந்திப்புக்கு செல்லலாம்.  
 
4. வடபழனி சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக்கூடாது, மாறாக பவா ஹ சந்திப்பு, அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்லலாம்.
 
5. அசோக் பில்லரிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி 2வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.  
 
7. வாகனங்கள் அம்பேத்கர் சாலை x 2வது அவென்யூ சாலை சந்திப்பிலிருந்து, 2வது அவென்யூ சாலை x 100 அடி சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் 2வது அவென்யூ சாலை x 100சாலை சந்திப்பிலிருந்து, அம்பேத்கர் சாலை x 2வது அவென்யூ சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை (ஒருவழி பாதை).
 
8. வாகனங்கள் அம்பேத்கர் சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகர் நகர் காவல் நிலைய சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுவார்கள்.அசோக் நகர் நகர் காவல் நிலைய சந்திப்பில் இருந்து பவர் ஹவுஸ் சந்திப்பு செல்ல அனுமதியில்லை (ஒருவழி பாதை).