ஓவியங் க iளின் மதிப்பைப் பற்றி நன்கு அறிந்திருந்த அந்த மியூஸியத்தின் அதிக ா ரியான பெண் ரயில்வேயில் இன்ஸ்பெக்டராக இருக்கும் பாலின் உதவியை நாடுகிறாள். இன்னும் சில தினங்களில் நாசிப் படைகளை மற்ற நாடுகளின் படைகள் ப ா ரிஸிலிருந்து துரத்திவிடும். சில நாட்கள் கர்னலின் ஓவியங்களை எடுத்துச் செல்லும் ரயிலை தாமதப்படுத்தினால் போதும், ஓவியங்கள் ஜெர்மனிக்குப் போகாமல் காப்பாற்றிவிடலாம்.
முதலில் மறுக்கும் பால் பிறகு உதவி செய்ய ஒத்துக் கொள்கிறார். ரயிலை தாமதப்படுத்தும் வேலை தொடங்குகிறது. இதில் என்ஜின் ட்ரைவரான குண்டு மனிதர் பாப் மாட்டிக் கொள்கிறார். அவரை அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்கின்றனர். பிறகு ரயிலை தயார் செய்யும் பொறுப்பு பாலிடம் ஒப்படைக்கப்படுகிறது. மேலும், ஜெர்மனி செல்லும் ரயிலில் என்ஜின் ட்ரைவராக பால் செல்ல வேண்டும் என்று கர்னல் கட்டளை இடுகிறார். ரயில் பலத்தப் பாதுகாப்புடன் கிளம்புகிறது.
பாப் தனது மற்ற தோழர்களின் உதவியுடன் ரயிலை ஜெர்மனிக்கு பதில் அதற்கு நேர்எதிர் திசையில் செலுத்துகிறார். அவர்கள் மீண்டும் திரும்பிய இடத்துக்கே வருகிறார்கள். அதற்குமுன் அந்த ரயில் நிலையத்தில் திட்டமிட்டு விபத்தை உருவாக்கி தண்டவாளங்களை சேதப்படுத்துகின்றனர். இதற்காக அந்த ஸ்டேஷன் மாஸ்டர் கர்னலின் ஆட்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
கர்னலின் ஆணைப்படி தண்டவாளம் சரி செய்யப்படுகிறது. அவர்கள் கிளம்புவதை தடுக்க முடியாது என்ற சூழலில் இங்கிலாந்தின் போர் விமானங்கள் ரயில் நிலையத்தை தாக்கும் அபாயம் ஏற்படுகிறது. ஓவியங்கள் இருக்கும் ரயில் பெட்டியின் மேல் பகுதிக்கு பெயின்ட் அடித்தால் அதை மட்டும் விமானம் தாக்காது என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த உளவாளி ஒருவர். பாலின் முக்கியமான நண்பர்கள் எல்லாம் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். மிஞ்சியிருப்பது சிலரே. அவர்களுடன் ரயில் நிலையம் செல்லும் பால், திட்டமிட்டபடி ரயில் பெட்டிகளுக்கு பெயிண்ட் அடிக்கிறார். மறுநாள் வரும் இங்கிலாந்தின் போர் விமானம் பெட்டிகளின் மேலுள்ள பெயின்டைப் பார்த்து ரயில் நிலையத்தை தாக்காமல் செல்கிறது. இதை கர்னல் தெரிந்து கொண்டு ரயிலை தைரியமாகக் கிளப்புகிறார்.
ஆனால் வழியில் தனியாளாக பால் செய்யும் வேலைகள் ரயிலை தாமதப்படுத்துகின்றன. அப்போது தரை வழியாக நாசிப் படைகள் ஜெர்மனி நோக்கி செல்வதை கர்னல் பார்க்கிறார். வண்டிகளை நிறுத்தி, அதிலுள்ள வீரர்களை கீழே இறங்கச் சொல்லி, ஓவியங்களை அந்த வண்டியில் ஏற்ற முயற்சிக்கிறார். ஆனால் அந்தப் படைப் ப ி ரிவின் அதிக ா ர ி இதற்கு மறுத்துவிடுகிறார். எத ி ரிகள் சமீபித்துவிட்டதாக அவர் சொல்ல, ரயிலில் உள்ள வீரர்களும் ரயிலைவிட்டு வண்டிகளில் ஏறிக் கொள்கிறார்கள். கர்னல் மட்டும் அடுத்த வண்டியில் வருவதாகச் சொல்லி கீழிறக்கப்பட்ட ஓவிய பெட்டிகளுடன் அங்கேயே நின்று கொள்கிறார். அப்போது துப்பாக்கியுடன் வரும் பால் தனியாக நிற்கும் கர்னலை பார்க்கிறார். கர்னல் பாலிடம் சில வார்த்தைகள் பேசுகிறார். பால் அதை பொருட்படுத்தாமல் கர்னலை சுட்டுக் கொல்கிறார்.
இந்தப் படத்தின் முக்கிய அம்சம், பாலும் சர ி, அவரது தோழர்களும் சரி ஓவியங்களின் அருமை முழுமையாகத் தெரியாதவர்கள். அந்த ஓவியங்களில் ஒன்றையாவது பார்த்திராதவர்கள் பலர் அந்த ஓவியங்களுக்காக உயிர் தியாகம் செய்கிறார்கள். முதலில் சுட்டுக் கொல்லப்படும் அந்த குண்டு என்ஜின் ட்ரைவரும்கூட இதுபற்றி அறியாதவர். ஆனால் சுட்டுக் கொல்லப்படும் சூழலில்கூட இது பிரான்சின் கௌரவம் என்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக ரயிலை தாமதப்படுத்தும் குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிரைவிட ஓவியங்களே முக்கியம் என்ற முடிவுக்கு அவர்களை அறியாமலே வருகின்றனர். இந்த மாற்றத்தை இயக்குனர் படிப்படியாக உருவாக்கியிருக்கும் விதம் அற்புதம் என்றே சொல்ல வேண்டும். அதேபோல் ஹோட்டல் நடத்தும் பெண்மணி, யாருக்கு என்ன நேர்ந்தால் என்ன, எனக்கு பாதிப்பு வரக்கூடாது என்று பாலிடம் கறாராக கூறுகிறாள். பிறகு காயத்துடன் தப்பிக்கும் அவருக்கு அவள்தான் அடைக்கலமும் தருகிறாள். போர் நேரத்தில் சராசரி மக்களின் உணர்வையும், இக்கட்டான நேரத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் தீரத்தையும் இயல்பான காட்சிகளுடன் படம் சொல்கிறது.
அடுத்து என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதை, ட்ரெயின் காட்சிகளை அற்புதமாக படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவு, கதையை மீறாத இசை, எடிட்டிங் என தி ட்ரெய்ன் நமக்கு முழுமையான கலை அனுபவத்தை தருகிறது.
ஏந்தப் பார்வையாளனும் தவறவிடக் கூடாத புகைவண்டி இது.