வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில் கடைசி நாளான இன்று வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சரிவில் உள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சற்றுமுன் 73 புள்ளிகள் சரிந்து 64 ஆயிரத்து 760 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 17 புள்ளிகள் மட்டும் சரிந்து 19,379 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் அதனால் புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த நேரம் பார்த்து முதலீடு செய்யவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் சற்று அச்சமடைந்திருந்தாலும் இன்னும் ஒரு சில நாட்களில் பங்கு சந்தை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
Edited by Siva