Daily Horoscope
✕

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

Written By Sugapriya Prakash
Updated: சனி, 23 ஜூலை 2022 (09:12 IST)
சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயரவில்லை.


ஆம், சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து 30 சதவீதம் சலுகை விலையில் கச்சா எண்ணையை அதிக அளவு இறக்குமதி செய்து உள்ளதால் இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

காதலை கைவிட மறுத்த 13 வயது சிறுமி கொலை - விழுப்புரத்தில் அதிர்ச்சி

தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளையும் பிடித்த தமிழ்நாடு காவல்துறை!

நடிகை வத்சலா காலமானார் - ரசிகர்கள் இரங்கல்

பத்திரிகையாளர் சௌரவ் தாஸிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! அதிரடி தகவல்...

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? - முக ஸ்டாலின் சொன்ன பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments