புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து உள்ளது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 15 ரூபாயும் ஒரு சவரன் 120 ரூபாயும் உயர்ந்துள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.7,945 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 63,560 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,667 எனவும் ஒரு சவரன் ரூபாய் ரூ.69,336 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
Edited by Mahendran