ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Mahendran
Updated: சனி, 23 நவம்பர் 2024 (11:36 IST)
கடந்த வாரம் தங்கம் விலை ஒரு சவரன் 55 ஆயிரத்து 480 என்ற விலையில் விற்பனையான நிலையில் இன்று தங்கம் விலை 58,400 என விற்பனை ஆகி வரும் நிலையில் ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 3000 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராம் 75 ரூபாயும் ஒரு சவரன் 600 ரூபாயும் உயர்ந்து உள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,300என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 600 உயர்ந்து ரூபாய்  58,400 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,805 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,440 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

பழனி கோவில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?.. பத்திரம் சொல்வது என்ன?..

டெங்கு நோயை கட்டுப்படுத்த ஜப்பானின் தடுப்பூசி.. மத்திய அரசு அங்கீகாரம்...!

பாஜக ஆட்சிக்கு எதிராக திரண்ட இளைஞர்கள்.. தமிழகம் போல் மத்தியிலும் ஆட்சியை மாற்றுவார்களா ஜென் சி?

பேய் வீட்டில் ஒரு நைட் தங்கினா ரூ.52 ஆயிரம் சம்பளம்!.. நீங்க ரெடியா?..

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments