ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2024 (11:07 IST)

6000-க்கும் அதிகமான நபர்களின் பங்கேற்புடன் நடைபெறவிருக்கும் சென்னை அரை மாரத்தான் 2024 நிகழ்வு!

Marathon

சென்னை அரை மாரத்தானின் 6வது பதிப்பு 2024 நவம்பர் 24 ஞாயிறு அன்று நடைபெறவிருக்கிறது. சென்னை மாநகரில் நடைபெறவிருக்கிற அதிக கௌரவமிக்க ஓட்ட நிகழ்வுகளுள் ஒன்றாக புகழ்பெற்றிருக்கும் இதில், 6000-க்கும் அதிகமான மாரத்தான் ஓட்ட ஆர்வலர்கள் பங்கேற்க தயாராக இருக்கின்றனர்.

 

 

அப்போலோ டயர்ஸ்-ன் ஆதரவோடு NEB ஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்து நடத்தும் இந்நிகழ்வில் அனைத்து வயது பிரிவுகளையும் மற்றும் பல்வேறு பின்புலங்களையும் சேர்ந்த ஓட்டப்பந்தய ஆர்வலர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் பங்கேற்கவிருக்கின்றனர். பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவு உயர்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த அரை மாரத்தான் நிகழ்வு சென்னையின் அழகான வழித்தடங்கள் வழியே பயணிக்கும்.

 

இந்நிகழ்வு, மூன்று மாறுபட்ட வகையினங்களில் நடத்தப்படுகிறது: அரை மாரத்தான் (21.1 கி.மீ.), நேர கணக்கீட்டுடன் 10 கி.மீ. மற்றும் 5 கி.மீ. ஓட்டங்கள். அரை மாரத்தான் நிகழ்வு காலை 4:30 மணியளவிலும் மற்றும் 10 கி.மீ. ஓட்டம் காலை 5:45 மணியளவிலும் மற்றும் 5 கி.மீ. ஓட்டம் காலை 7:00 மணியளவிலும் ஆரம்பமாகும். இந்த மூன்று வகையின ஓட்டங்களிலும் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ரேஸ் தின டி-ஷர்ட் வெற்றிகரமாக ஓட்டத்தை நிறைவுசெய்வததற்கான பதக்கம் மற்றும் ஓட்டப்பந்தயம் முடிவடைந்த பிறகு சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படும்.

 

சென்னை அரை மாரத்தான் நிகழ்வானது இம்மாநகரைச் சேர்ந்த ஓட்ட ஆர்வலர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதுமட்டுமன்றி, கார்ப்பரேட் துறை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உட்பட சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் மத்தியிலும் மிக பிரபலமான நிகழ்வாகத் திகழ்கிறது. 6-க்கும் அதிகமான கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போட்டிகளில் பங்கேற்க அவர்களது குழுக்களை களத்தில் இறக்கியிருக்கின்றனர். உடற்தகுதி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் குறிக்கோளோடு தங்களது பணியாளர்களை இந்நிகழ்வுகளில் பங்கேற்க அப்போலோ டயர்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்டஸ் இண்ட் வங்கி போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊக்குவித்திருக்கின்றன. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அமிர்தாஞ்சன், இந்நிகழ்விற்கான வலி நிவாரணி பார்ட்னராக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது.

 

பெண்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் கல்வியை முன்னிலைப்படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்தோடு ஓட்டப்பந்தய வீரர்களின் ஒரு குழு இதில் பங்கேற்கிறது.

 

கைடு ரன்னர் இந்தியா என்ற அமைப்பின் ஆதரவோடு, பார்வைத்திறன் பாதிப்புள்ள ஓட்டப்பந்தய வீரர்களின் ஒரு குழுவும் அரை மாரத்தான் மற்றும் 10 கி.மீ. வகையின ஓட்டங்களில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது மற்றும் பாராட்டுதலுக்குரியது.

 

இதற்கும் கூடுதலாக, HIV தொற்றோடு பிறந்து அதனோடு வாழ்ந்துவருகிற இளம் தடகள தூதர்கள் இந்த ஓட்டப்பந்தய நிகழ்வுகளில் பங்கேற்கவிருக்கின்றனர். பெங்களூரு ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் ஒரு முன்னெடுப்பான ‘Champion in Me’ என்ற இக்குழுவின் பங்கேற்பு பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும் என்பது நிச்சயம்.

 

“இச்சிறப்பான நிகழ்வை சென்னை மாநகரம் நடத்துவதும் மற்றும் இதற்கு கிடைத்திருக்கும் சிறப்பான வரவேற்பையும் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. உடற்தகுதி மீது தீராத பற்றுக் கொண்ட ஆர்வலராகவும் நான் இருப்பதால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நான்  நன்கு புரிந்திருக்கிறேன். உடற்தகுதியையும், ஆரோக்கியத்தையும் முன்னிலைப்படுத்தும் இத்தகைய நிகழ்வுகளுக்காக சமுதாயம் ஒன்றுபட்டு செயல்படுமானால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் இது பலனளிக்கும்,” என்று புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குநர் திரு. பிரதாப் சிங் கூறினார்.

 

“இந்த ஆண்டு இந்நிகழ்வுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மற்றும் பல்வேறு வயதுப்பிரிவுகள் மற்றும் பின்புலங்களைச் சேர்ந்த மாறுபட்ட நபர்களின் பங்கேற்பு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ‘விளையாட்டுகளுக்கு அணுகுவசதி’ என்ற அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் முன்னெடுப்புகளை இது கூடுதல் ஆற்றலை வழங்குகிறது. எமது பணியாளர்களுக்குள் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வை நாங்கள் ஊக்குவித்து முன்னிலைப்படுத்தும் செயல்பாட்டுக்கும் இது உத்வேகமளிக்கிறது. உடற்தகுதி, மனநலம், குழுவாக ஒருங்கிணைந்து செயல்படும் உணர்வு ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கிற வாழ்க்கைமுறை மீதான எமது பொறுப்புறுதியை இந்நிகழ்வுக்கான ஆதரவின் மூலம் நாங்கள் மேலும் வலுப்படுத்துகிறது. உடற்தகுதியுடன்கூடிய செயல்திறனை அனைத்து பிரிவினர் மத்தியிலும் இது ஊக்குவிக்கும்,” என்று அப்போலோ டயர்ஸ்-ன் ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் அண்டு கம்யூனிட்டீஸ் பிரிவின் தலைவர் திரு. ரீமஸ் டி’க்ரூஸ் கூறினார்.

 

“2017-ம் ஆண்டில் முதன்முறையாக நடைபெற்ற நிகழ்வுக்குப் பிறகு சென்னை அரை மாரத்தான் நிகழ்வானது பன்மடங்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்நிகழ்வில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நிலையாக அதிகரித்து வந்திருக்கிறது. பங்கேற்பாளர்களுக்கு திருப்தியளிக்கும் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதில் NEB ஸ்போர்ட்ஸ்-ல் உள்ள நாங்கள் முழுமையாக நம்புகிறோம்; எங்களைப்போலவே இந்நிகழ்வில் பங்கேற்கும் ஓட்டப்பந்தய ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் இதனை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள் என்பது எங்களது நம்பிக்கை,” என்று இந்த மாரத்தான் நிகழ்வின் ரேஸ் இயக்குநர், திரு. நாகராஜ் அடிகா கூறினார்.