Daily Horoscope
✕

ரூ.60,000ஐ நெருங்கியது ஒரு சவரன் தங்கம் விலை.. இன்னும் உயருமா?

Written By Siva
Updated: புதன், 30 அக்டோபர் 2024 (10:06 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சவரன் தங்க நகை 59 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் தற்போது 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 65 ரூபாயும் ஒரு சவரனுக்கு 520 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,440 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 உயர்ந்து ரூபாய்  59,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,945 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 109.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  109,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

சென்னை.. மதுரை.. திருச்சி.. அதிரடியாக உயர்ந்த விமான கட்டணம்! - பொதுமக்கள் அதிர்ச்சி

கௌதம் மேனன் இயக்கத்தில் முதல்வர் விஜய் - விஜய் ரசிகர்கள் செம ஹேப்பி

3 ஆயிரம் கோடி ஊழல்!.. விஜய் கவனமா இருக்கணும்.. எச்சரிக்கும் ராமதாஸ்...

மனைவியை நாற்காலியில் கட்டி வைத்து உயிருடன் கொளுத்திய கணவன்! 2 குழந்தைகளுடன் தலைமறைவு...

மைக்ரோசாப்ட், கூகுளை அடுத்து டிஸ்னியும் லே ஆப் திட்டம்.. செலவுகளை குறைக்க போகிறதாம்...

அடுத்த கட்டுரையில்
Show comments