தொடர் சரிவில் தங்கம்.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Written By Siva
Updated: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (09:53 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் இருபது ரூபாய் குறைந்துள்ளதாகவும் ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய்   6,660 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160  குறைந்து  ரூபாய் 53,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,115 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,920 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்றைய வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 91.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  91,700.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva

எல்லாம் காட்டு

ஈரானுக்கு எதிரான போரில் 3.6 லட்சம் கோடி செலவு!.. அமெரிக்கா அறிவிப்பு..

இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள அசத்தல் போட்டி.. வெற்றி பெற்றால் ரூ.75,000 பரிசு...

தமிழகத்துக்கு வரும் ராஜேஷ் லக்கானி!. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!...

என் குழந்தையாக இருந்தால்!. டெல்லி நீட் தேர்வுக்கு அபிராமி ஆதரவு!..

ரயில் கட்டணங்களில் 3% தள்ளுபடி.. ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு.. யார் யார்க்கு பொருந்தும்?

அடுத்த கட்டுரையில்
Show comments