Daily Horoscope

மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 760 ரூபாய் உயர்வு..!

Written By Siva
Updated: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (11:04 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் ஆனால் மத்திய அரசின் பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிப்பு வந்த பிறகு தங்கம் விலை சரிந்தது என்பதையும் பார்த்தோம். 
 
ஆனால் சரிந்த தங்கம் விலை படிப்படியாக மீண்டும் உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 760 உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,565 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 760 உயர்ந்து ரூபாய் 52,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.53,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,020 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,160 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 88.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  88,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments