Daily Horoscope
✕

தங்கம் விலை தொடர் உயர்வு.. மீண்டும் ஒரு சவரன் விலை ரூ.52000ஐ நெருங்கியது..!

Written By Siva
Updated: சனி, 10 ஆகஸ்ட் 2024 (10:58 IST)
மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கம் விலை அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு கிராமுக்கு 20 ரூபாய், ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,445 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 51,560 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,900 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,200 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 88.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  88,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

திடீரென உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை.. ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு..

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை...

மத்திய அமைச்சர் எல் முருகன் ராஜினாமா? தமிழக அரசியலை கவனிக்க போவதாக அறிவிப்பு...!

அடுத்த 48 மணி நேரத்தில்!.. வடகிழக்கு பருவமழை அப்டேட் கொடுத்த வானிலை மையம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments