Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைகீழாக இறங்கிய தங்கம் விலை.. 10 நாட்களில் ரூ.3600 சரிவு..!

Written By Siva
Updated: செவ்வாய், 30 ஜூலை 2024 (09:54 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிப்புக்கு பின்னர் அதிகமாக குறைந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாயும் ஒரு சவரனுக்கு 240 ரூபாயும் குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 3600 குறைந்துள்ள நிலையில் இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூபாய்   6,385 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 குறைந்து  ரூபாய் 51,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.50,000 என குறையும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,840 எனவும் ஒரு சவரன் ரூபாய் 54,720 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 89.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 89,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..

மொரோக்காவில் இருந்து கடலில் நீந்தியே ஸ்பெயின் சென்ற 60,000 அகதிகள்.. அதிர்ச்சி தகவல்..

ஒரே ஒரு நாள் தான் டேட்டிங் செய்தேன்.. ஒரு மாத சம்பளம் போச்சு.. டேட்டிங் செயலியின் மோசடிகள்..

ஏன் எல்லோரும் Work From Home விரும்புகிறார்கள் தெரியும்.. அடுக்கடுக்கான காரணங்களை கூறும் ஸ்நேகா..

இந்தியா நல்லா இருக்குன்னா எதுக்கு துபாய் போய் செட்டில் ஆனீங்க.. நடிகர் மாதவனை கேள்வி கேட்கும் ராஜ் தாக்கரே..

அடுத்த கட்டுரையில்
Show comments