தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. இன்னும் உயருமா? இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: செவ்வாய், 18 ஜூன் 2024 (11:54 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில்  இன்று மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,695 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 53,560 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,165 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,320 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 96.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 96,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

இன்னும் 10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும் - எலான் மாஸ்க்

கேரளாவின் கனிமவள சொத்து பாதுகாப்பா இருக்கனும்.. தமிழ்நாட்டு சொத்து மட்டும் பறிபோகனுமா? நெட்டிசன்கள் கேள்வி..

மீனாட்சி அம்மன் தகோயிலுக்கு சொந்தமான 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி பதிவு

சீமானை விமர்சித்த பிஸ்மி மீது வழக்குப்பதிவு!.. நீதிமன்றம் அதிரடி...

உங்க கொசுப்படை சூப்பர்!.. நானும் ஃபாலோ பண்றேன்!.. ஈரானை பாராட்டும் புதின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments