Daily Horoscope
✕

திடீரென 800 ரூபாய்க்கு மேல் குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

Written By Siva
Updated: வியாழன், 23 மே 2024 (09:44 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் கடந்த நான்கு நாட்களுக்கு முன் திடீரென உயர்ந்து ஒரு சவரன் 55 ஆயிரம் என விற்பனையானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்துள்ளதை அடுத்து தங்க நகை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து ரூபாய் 6,750 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 880 குறைந்து ரூபாய் 54,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,220 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,760 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 97.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 97,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்...

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments