Daily Horoscope
✕

மீண்டும் உயர்கிறது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

Written By Siva
Updated: செவ்வாய், 7 மே 2024 (10:03 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து  ரூபாய் 6,640 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 உயர்ந்து ரூபாய் 53,120 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,110 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,880 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 88.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 88,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.5 கோடி!.. ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய்!...

நேப்பியர் பாலத்துக்கு கீழ தொங்க விடுவாரு!.. விஜயை கலாய்த்த மேயர் பிரியா...

ஆண்ட்ராய்டு குரோம் பயனர்களுக்கு கூகுள் ஜெமினியின் புதிய வசதி அறிமுகம்! சூப்பர் தகவல்..

மதுராந்தகம், தாராபுரம் நாளை வாக்கு எண்ணிக்கை!.. வெற்றி யாருக்கு?..

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு 'Z+' பாதுகாப்பு.. மத்திய அரசு அதிரடி..

அடுத்த கட்டுரையில்
Show comments