Daily Horoscope
✕

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.640 உயர்வு..!

Written By Siva
Updated: வியாழன், 2 மே 2024 (09:53 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 640 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து  ரூபாய் 6,715 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 640 உயர்ந்து ரூபாய் 53,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,185 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,480 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 87.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 87,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

கனடா செல்கிறார் பிரதமர் மோடி.. புதிய பிரதமர் மார்க் கார்னியுடன் முக்கிய பேச்சுவார்த்தை..

கூலிங் ஃபேன் உடன் ஒன் பிளஸ் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்.. கேமிங் பிரியர்களுக்கு செம்ம போன்...

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்த தேர்தல் ஆணையம்...

வங்கக்கடல், அரபிக்கடல்.. ஒரே நேரத்தில் 2 புயல்கள்.. தமிழகத்தில் கொட்ட போகுது கனமழை...

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments