தங்கம் விலை இன்று குறைவு.. ஆனாலும் ரூ.55,000ஐ விட குறையவில்லை..!

Mahendran
சனி, 20 ஏப்ரல் 2024 (13:23 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே உள்ளது என்பதும் நேற்று 55 ஆயிரத்து தாண்டியது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தங்கம் விலை தற்போது சற்று குறைந்து இருந்தாலும் இன்னும் 55 ஆயிரத்துக்கு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 6,885 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து ரூபாய் 55,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,355 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,840 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 90.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

100 கோடி நிலம் விவகாரம்!.. எல்லாமே பொய்... அமைச்சர் ரமேஷ் விளக்கம்!..

ஆட்சிக்கு ஆதரவாக திரையுலகினரை வைத்து விளம்பரம்!.. தவெக போடும் ஸ்கெட்ச்!..

பெண்கள் அந்தரங்க வீடியோ!.. நாகர்கோவில் காசிக்கு வாழ்நாள் சிறை உறுதி!..

கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?!.. இளம்பெண்ணை திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்!.. வீடியோ உள்ளே

விசாரணைக்கு வரேன்!. ஆனா அரெஸ்ட் பண்ணக்கூடாது!.. காவல்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments