Daily Horoscope

தங்கம் விலை குறைந்தாலும் ரூ.52,000க்குள் வரவில்லையே? பொதுமக்கள் அதிருப்தி

Written By Siva
Updated: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (10:10 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தங்கம் விலை உச்சத்திற்கு சென்றது என்பதும் குறிப்பாக ஒரு சவரன் 52 ஆயிரத்துக்கும் அதிகமாக சென்றது என்பதை ஏன் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு 360 குறைந்துள்ள நிலையில் இன்று ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ரூபாய் 6,510 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 280 குறைந்து  ரூபாய் 52,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,980   எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,840 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 85.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 85000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments