Daily Horoscope
✕

புத்தாண்டில் தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: திங்கள், 1 ஜனவரி 2024 (11:22 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலையில் என்ற விதமான மாற்றமும் இல்லை. அந்த வகையில் புத்தாண்டு தினமான இன்றும் தங்கம் விலையில் மாற்றமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது 
 
 சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5910 என விற்பனையாகி வருகிறது. கடந்த டிசம்பர் 29ஆம் தேதியிலிருந்து தங்கத்தின் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை 47,280 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. 
 
தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலையும் கடந்த மூன்று நாட்களாக எந்த விதமான மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 ரூபாய் என்றும் ஒரு கிலோ 80 ஆயிரம் ரூபாய் என்று விற்பனையாகி வருகிறது. 
 
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமின்றி இருந்தாலும் இந்த ஆண்டு தங்கத்தின் விலை அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments