Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தலைகீழாக சரிந்த தங்கம் விலை. என்ன ஆச்சு?

Written By Siva
Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (09:48 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் குறிப்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு பின்னர் திடீரென பயங்கரமாக உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் திடீரென ஒரு கிராமுக்கு 65 ரூபாய் குறைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ரூபாய் 5440.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 குறைந்து  ரூபாய் 43520.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5802.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46416.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 140 காசுகள் குறைந்து  ரூபாய் 76.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76400.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

என் தம்பியவே திட்றீங்களா?!.. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்!..

பிக்பாஸ் தோல்வி!.. விஜய் சேதுபதி மார்கெட் போன நடிகர்!.. பிரபலம் பேட்டி!...

கொலையில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு!.. கனிமொழி ஆவேசம்..

வீடியோ வேண்டாம்.. நிறுத்துங்க.. சென்னை நிகழ்ச்சியில் டென்ஷனான நிர்மலா சீதாராமன்..

இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது வருத்தம் தான்: மாணிக்கம் தாகூர்..

அடுத்த கட்டுரையில்
Show comments