Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Written By Siva
Updated: புதன், 12 பிப்ரவரி 2025 (16:05 IST)
பங்குச்சந்தை இன்று காலை முதல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் முடிவடைந்த போது, சரிவுடன் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை சரிவுடன் தான் தொடங்கியது. ஆனால், அதே நேரத்தில் சில மணி நேரத்தில் பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்தது என்பதும், சுமார் 100 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்த நிலையிலும் மீண்டும் சரியத் தொடங்கியது.

பங்குச்சந்தை வர்த்தகம் முடியும் போது, 122 புள்ளிகள் சரிந்து 76,171  என்ற புள்ளிகளில் முடிவடைந்தது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 26 புள்ளிகள் சரிந்து 23,045 என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

இன்றைய பங்குச்சந்தையில் டாட்டா ஸ்டீல், கோடக் மகேந்திரா வங்கி, டாட்டா மோட்டார்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர், எச்டிஎப்சி வங்கி, பிரிட்டானியா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

அதே நேரத்தில் ஐசிஐசிஐ வங்கி, சிப்லா, ஆக்சிஸ் வங்கி, டி.சி.எஸ், எச்.சி.எல்.டெக்னாலஜி, சன் பார்மா, இன்போசிஸ், டைட்டான், விப்ரோ, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

எல்லாம் காட்டு

மம்தா ஆட்சியில் துணை சபாநாயகராக இருந்தவர் தூக்கில் தொங்கி தற்கொலை? அதிர்ச்சியில் மேற்குவங்க மக்கள்..

மானை வேட்டையாடிய 3 பேரை என்கவுண்டர் செய்த வனத்துறை!....

அம்மாவ கேட்டாதான் அப்பா யாருன்னு தெரியும்!.. நயினார் நகேந்திரன் சர்ச்சை பேச்சு!...

தளபதி விஜய் சாலை!. முதல்வருக்கு வேறமாறி நன்றி சொன்ன கிராம மக்கள்!...

விஜயோட ஆசையே இதுதான்!. வெயிட் பண்ணி பாருங்க!.. ஹைப் ஏத்தும் எஸ்.ஏ.சி!..

அடுத்த கட்டுரையில்
Show comments