வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 4 நவம்பர் 2024 (09:26 IST)

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை பெரும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

கடந்த வாரம் பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்து, அதற்கு முந்தைய வாரம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டிய நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் மீண்டும் பங்குச்சந்தை பெரும் அளவில் சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில், 600 புள்ளிகள் சரிந்து 79,110 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 193 புள்ளிகள் சரிந்து 24,090 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளன. அதேபோல், HCL டெக்னாலஜி, IndusInd வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை சரிந்தாலும், வரும் நாட்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், அமெரிக்காவின் பெடரல் வங்கியின்  வட்டி விகிதம் குறித்து அறிவிப்பு வெளியானால், அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Edited by Siva