இரண்டாவது நாளாக உயர்ந்த பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று உயர்ந்த நிலையில் மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வாரம் திங்கட்கிழமை பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்த நிலையில் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு தினங்களிலும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளது
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 25 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 750 என்ற முறையில் வர்த்தகமாகி வருகிறது, குறைந்த அளவே சென்செக்ஸ் உயர்ந்துள்ளதால் இன்று மதியத்திற்கு மேல் சரிய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
தேசிய பங்குச்சந்தை நிப்டி வெறும் இரண்டு புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 17800 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்று பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.