டிரம்ப் வெற்றியால் உயர்ந்த பங்குச்சந்தை.. மீண்டும் சரிவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் வெற்றியால், இந்திய பங்குச் சந்தை நேற்று முன்தினம் உயர்ந்த நிலையில் இருந்தது. ஆனால், நேற்று மற்றும் இன்றும் தொடர்ந்து சரிந்து வருவது, முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று 800 புள்ளிகள் வரை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 70 புள்ளிகள் சரிந்து, 79,473 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை 40 புள்ளிகள் சரிந்து, 24,150 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் அப்போலோ மருத்துவமனை, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, எச்.சி.எல் டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி, இன்போசிஸ் மற்றும் ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதே நேரத்தில், இண்டஸ் இண்ட் வங்கி, ஹீரோ மோட்டார், டாக்டர் ரெட்டி, கோல் இந்தியா, பிரிட்டானியா, ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva