Daily Horoscope
✕

இதுவரை இல்லாத உச்சம்.. 66 முடிந்து ரூ.67ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை..

Written By Siva
Updated: புதன், 19 மார்ச் 2025 (10:03 IST)
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், 10 நாட்களில் ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த பத்தாம் தேதி, ஒரு சவரன் ரூ.64,000 என்ற விலையில் விற்பனையானது. ஆனால் இன்று, ரூ.66,320 என விற்பனை ஆகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வாரத்திற்குள், தங்கத்தின் விலை ரூ.67,000 அருகில் செல்லும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், நேற்றைய விலையை ஒப்பிடும்போது, இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.40 மற்றும் ஒரு சவரன் ரூ.320 உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், வெள்ளியின் விலையும் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,000 உயர்ந்துள்ளது.
 
இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூபாய்   8,290 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 உயர்ந்து  ரூபாய்  66,320 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,043 எனவும் ஒரு சவரன் ரூபாய் 72,344 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 114.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  114,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் தங்க நகை கொள்ளை!..

தேர்தல் தோல்வி எதிரொலி!.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு...

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு...

காவிரியிலிருந்து நீரை திறந்துவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. டிகே சிவகுமார் கருத்து...

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாத அனுமதி ரத்து - ஷாக் கொடுத்த மலேசிய அரசு..

அடுத்த கட்டுரையில்
Show comments