Daily Horoscope

ரூ.100-ஐ கடந்த டீசல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 23 அக்டோபர் 2021 (08:23 IST)
தமிழக வரலாற்றில் முதல் முறையாக டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

 
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி கொண்டு வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கணிசமாக உயர்த்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது.  
 
இந்நிலையில் தமிழக வரலாற்றில் முதல் முறையாக டீசல் விலை 100 ரூபாயை கடந்திருப்பது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பின்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.104.22க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 33 காசு அதிகரித்து ரூ.100.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments