வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Updated : வியாழன், 23 மே 2019 (13:57 IST)

மக்களின் தீர்ப்பு : வாயடைத்துப்போன அதிமுக ! அதிர்ந்துபோன தேமுதிக ...

கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கிய இந்திய மக்களவைத் தேர்தல்  மே-19 ஆம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெற்றன. உலகமே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் அடுத்த பிரதமர் யார்? அடுத்ததாக ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது யார் என்பது குறித்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் காலை  8 மணிக்கு தொடங்கின.
இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே நாடுமுழுவதும் பாஜக முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி பின் தங்கிய நிலையிலேயே இருந்தது. 
 
பிற்பகல் வேளையின் போது நாடு தழுவிய அளவில் பாஜக தனிப்பெரும்பான்மைபெற்று ஆட்சி அமைக்கும் என்ற எண்ணம் மோலோங்கியிருந்தது.
 
இந்நிலையில் தற்போது பாஜக 339 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.  அதேசமயம் காங்கிரஸ் 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  
 
இதனையடுத்து  பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிமன்றக்குழு கூட்டம் இன்று மாலை 5:30  மணிக்கு டெல்லியில் நடைபெறுவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவில் பாஜக பெரும்பான்மை பெற்றாலும்கூட, தமிழகத்தில் பாஜக காலூன்றுவது இம்முறையும் கேள்விக்குறியாகியுள்ளது. 
 
ஆம்! தமிழகத்தில்  அதிமுகவின் மெகா கூட்டணியில் இடம்பெற்ற பாஜக  5 தொகுதிகளில்  கோவையில்  மட்டுமே முன்னிலை வந்தது. ஆனால் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர் நடராஜன் 153154 வாக்குகள் பெற்று  பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனை பின்னுக்குத் தள்ளினார். அதேபோல் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனைவிட 124000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளதாகவும்.
 
தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாமக கட்சி வேட்பாளர் அன்புமணி ராமதாஸைவிட செந்தில்குமார் முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
இந்நிலையில் திமுக மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தற்போதுவரை 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, ஆனால் அதிமுக 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இது அதிமுகவுக்கு பலத்த சறுக்களை உண்டாக்கியுள்ளது. தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ்-ன் மகன் ரவீந்திரநாத் முன்னிலையில் இருகிறார் என்று தகவல் வெளியாகிறது.
 
அதேசமயம் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த  தேமுதிக, 4 மக்களவைத் தொகுதியில் விடாப்பிடியாய் போட்டியிட்டு தற்போது பலத்த தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.