ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (16:16 IST)

பாரிவேந்தர் வெற்றி பெறக் காரணம் இதுதான் ? பரபரப்பு தகவல்

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய இந்திய மக்களவைத் தேர்தல்  மே 19 ஆம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெற்றன. உலகமே உற்றுக்கவனித்துக்கொண்டிருக்கும் இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் அடுத்த பிரதமர் யார் ? அடுத்ததாக ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது யார் என்பதுகுறித்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் காலை  8 மணிக்கு தொடங்கின.
ஆரம்பம் முதலே தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புகள் வாக்கு எண்ணிக்கையாக மாறி இந்தியாவில் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுளாக வெளியான வண்ணம் இருந்தன.
 
இந்நிலையில் தற்போது பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க அமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் 339 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து மோடி தலைமையில் ஆட்சியமைக்க வேண்டி, வரும் 26 ஆம் தேதி பாஜகவினர் இந்தியக் குடியரசுத்தலைவரிடம் அனுமதி கோரவுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்று பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட ஐஜேகே கட்சியின்  தலைவரும் கல்வியாளருமான பாரிவேந்தர் 3. 26  லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் என்.ஆர் சிவபதியை (207328) விட மேற்சொன்ன வாக்குகள் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
 
மேலும், பலவருடமாக அரசியலில் ஈடுபட்டுவரும் சிலமுறை தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று தோல்வி கண்டவர்,
 
ஆனாலும் தனது தொடர்முயற்சியால் இன்று மிகப்பெரிய வாக்குகள்  வித்தியாசத்தில் மக்களவை தேர்தல்  வாக்குப்பதிவில்  முன்னிலை வகிக்கிறார்.
 
இந்தியாவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுன் ஒன்று இவருடையது. கல்விக் கொடையாளராகவும் திகழ்கிறார்.
 
அண்மையில் கஜா புயலில் பாதிப்படைந்த டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த தனது கல்லூரில் படிக்கும் மாணவர்களின் கல்வியை தானே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இவரது இம்முடிவை எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.
 
இந்தக் கல்விக்கொடையுடன், தேர்தலுக்கு முன்னர் பாரிவேந்தர்,  மேற்கொண்ட கடுமையான பிரச்சாரம்தான் அவரது நீண்டகால அரசியல் பயணத்திற்குக் கிடைத்த வெற்றி என தகவல்கள் வெளியாகிறது.