புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (13:22 IST)

எதிர்க்கட்சியே இல்லாமல் ஆட்சி அமைக்கும் மோடி – காங்கிரஸுக்கு அடிமேல் அடி!

மக்களவைத் தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள  காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தனிபெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் எதிர்க்கட்சியாக பொறுப்பேற்பதற்கு குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இந்த தோல்வியை முழுமையாக ஒத்துக்கொண்டு ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள் என்றும் அவர்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.