புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (17:04 IST)

’’ஜெயலலிதாவுடன் என்னை இணைத்து பார்க்கிறார்கள் ’’- பிரேமலதா

அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஓட்டுசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள இருபெரும் திராவிட கட்சிகளின் பிரசாரம் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சிக்கும் வகையில் உள்ளது.இதனால் மக்கள் தலைவர்களின் பேச்சைக்கேட்டு முகம் சுளிக்கின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோ அரசியல் களத்தில் ஆக்டிவாக இருந்த போதே அரசியலில் தடம் பதித்தவர் விஜயகாந்த்.
தற்போது அவருக்கு உடல்நிலை சர்யில்லாமல் உள்ளதால் பேசுவதில் சிரமப்படுகிறார். அதனால் விஜயகாந்த் ஓய்வெடுத்து வருகிறார். அவரது மனைவி பிரேமலதா அக்கட்சியின், தேமுதிக பொருளாளர் ஆக இருந்து தற்போது பிரசாரம் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
விஜயகாந்த் எப்போது பரப்புரைக்கு வருவார் என்ற அறிவிப்பை இன்னும் இரண்டு நாட்களில் அறிவிப்போம்.
 
காங்கிரஸில் அக்கட்சியிலுள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. எனவே நடிகை குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 
எல்லோரும் என்னுடைய பரப்புரையை கவனிப்பதால் ஜெயலலிதாவுடன்  இணைத்து பார்க்கிறார்கள்.
 
எதிர்கட்சிகளுக்குக் சொந்தமான இடங்களில் ஐடி சோதனை நடத்தப்படுவதாக கேட்ட கேள்விக்கு  அவர் கூறியதாவது :
 
யாருடைய ஆட்சியில் எமர்ஜென்ஸி எனபதை அறிந்து சர்வதிகார ஆட்சி யாருடையது என்பது தெரியும்.
 
சோதனைகளின் மூலம் எதிர்க்கட்சிகளை பழிவாங்கவில்லை. சட்டம் தன் கடமைகளை செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.