தேர்தலில் பிரதமருக்கு வேட்டு வைக்க வேண்டும்..! உதயநிதி ஸ்டாலின்..!!
மக்களவை தேர்தலில் பிரதமருக்கு வேட்டு வைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தர்மபுரி தொகுதியில் ஆ.மணி வெற்றி பெறுவது உறுதி என்பதை, உங்கள் எழுச்சியை பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறினார்.
வரும் 19-ம் தேதி நடைபெறும் தேர்தலில் நாம் பிரதமருக்கு வேட்டு வைக்க வேண்டும் என தெரிவித்த அமைச்சர் உதயநிதி, அப்பொழுதுதான் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை, சுயமரியாதை என்ன என்பதை தெரிந்து கொள்வார் என்று கடுமையாக சாடினார்.
மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று கேட்டால், பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பதில் தருகிறார் என்று விமர்சித்தார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் நிதியுரிமை, மொழியுரிமை, மாநில உரிமைகள் அனைத்தையும் அடகு வைத்த அ.தி.மு.கவிற்கும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவிற்கும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.