வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (16:29 IST)

தமிழகத்தில் பிறக்காத மறத் தமிழன் பிரதமர் மோடி..! அண்ணாமலை...

Annamalai
இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற எம்பிக்களில் மிக மோசமான எம்பி ஆ.ராசாதான் என்றும் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ஆ.ராசா, நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
 
மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை,  திமுகவில் வாரிசு அரசியல்தான் ஓங்கி இருக்கிறது என்றும் இதுதான் ஜனநாயகமா?, ஜனநாயகத்தை பற்றி திமுகவினர் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
 
2ஜி அலைக்கற்றை மோசடியில் திகார் சிறை சென்றவர் ஆ.ராசா என்றும் அதன் பிறகு அடுத்த வாரமே கனிமொழியும் சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார். திமுக கூட்டணி வைத்த காங்கிரஸ் அரசாங்கத்தாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற எம்பிக்களில் மிக மோசமான எம்பி ஆ.ராசாதான் என்று அண்ணாமலை சாடினார். பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ஆ.ராசா, நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
 
தமிழகத்தில் பிறக்காத மறத் தமிழன் பிரதமர் மோடி என்று குறிப்பிட்ட அண்ணாமலை,  ஆனால் தமிழின் பெருமையை கும்மிடிப்பூண்டியை தாண்ட விடாமல் தடுத்தது திமுகதான் என்று விமர்சித்தார். 


இன்னும் ஒரு வாரம் வரை சாப்பிடாமல் உறங்காமல் கடுமையாக உழைத்தால்தான் பிரதமர் மோடி 3-ஆவது முறையாக இந்தியாவின் பிரதமராக முடியும் என்றும் 400 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என தமிழக மக்கள் மோடியை ஆசிர்வதிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.