குக்கர் மாதிரி தானே அவர் முகமும் இருக்கு குண்டா! அவரை பார்க்கும் போது குக்கர் சின்னம் ஞாபகத்திற்கு வர வேண்டும் - அனுராதா டிடிவி தினகரன்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டி, மாதரை, உசிலம்பட்டி 2 வது வார்டு பகுதி, பேருந்து நிலையம், அன்னம்பாரிபட்டி, கீரிபட்டி, பாப்பாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது துணைவியார் அனுராதா டிடிவி தினகரன் கிராமம் கிராமமாக சென்று பெண்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
மாதரை கிராமத்தில் அமமுக நிர்வாகிகள் அளித்த சமாதான புறாவை பறக்க விட்டு பரப்புரை செய்தார்.
பின்னர் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து பேசிய அனுராதா டிடிவி தினகரன்....
குக்கர் சின்னம் எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள், அவருக்கு போட வேண்டும் என எண்ணினாலும் வேறு சின்னத்திற்கு போட்டு விடாமல் சின்னத்தில் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மற்றவருக்கும் எடுத்து சொல்லுங்கள்.
இதற்கு முன்னாள் வேறு ஒரு சின்னத்தில் நின்றதால் இதை சொல்கிறேன்.
அரசியல் பாதையை துவங்கியது தேனி தொகுதி, இந்த தொகுதிக்கு நீங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை அவரே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி செய்தாரோ அதே போல செய்வார்.
அவர் என்னோடும், என் மகளோடும் இருந்ததை விட உங்களோடு இருந்தது தான் அதிகம்.
ஆர்.கே.நகரில் கிடைத்தது இந்த குக்கர் சின்னம், ஆர்.கே.நகரில் பட்டன் தேயும் அளவிற்கு வாக்களித்தனராம் அதே போல இந்த தேனி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
குக்கர் சின்னம் நீங்கள் வீட்டில் பார்க்கும் குக்கர் போன்றது.தினசரி பால், சாப்பாடு வைப்போம்.அந்த குக்கர் மாதிரி தானே அவர் முகமும் இருக்கு குண்டா!!! அவரை பார்க்கும் போது குக்கர் சின்னம் ஞாபகத்திற்கு வர வேண்டும்.
குக்கர்னா டிடிவி, டிடிவி னா குக்கர். குக்கருக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் வளர்ச்சிக்கான ஓட்டு என பேசினார்.