கன்னட மொழியில் பேசி வாக்கு சேகரித்த அண்ணாமலை!
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிகள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீர கேரளா பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வீரகேரளம் ரவுண்டானா பகுதியில் உரையாற்றிய அண்ணாமலை, மோடியின் பிரதிநிதியான உங்கள் வீட்டு அன்பு தம்பி யை வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினார்.
இம்முறை கோவை பாராளுமன்ற தொகுதியில் தாமரை மலரும் என கூறிய அவர் வேறு எந்த கட்சி வண்டியும் இங்கிருந்து டெல்லி செல்லாது என தெரிவித்தார்.
("Housing Board") பேரும் பிரச்னையாக வீர கேரளத்தில் உள்ளது. பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்தது தொடர்பாக உரிய நிவாரணம் கிடைக்கவில்லை அவற்றிற்கான தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த குரும்பர் இன மக்கள் கம்பளி ஒன்றை அன்பளிப்பாக கொடுத்தனர்.
அதனைப் பெற்றுக் கொண்ட அண்ணாமலை கன்னடத்தில் பேசி அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, கன்னடத்தில் பேசி வாக்கு சேகரித்தார்