1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (13:50 IST)

சீமானுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை..! அண்ணாமலை கடும் விமர்சனம்..!!

annamalai
சீமானுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை என்று கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
 
கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐ பொய் சொல்கிறது என சொல்பவர்கள் விவாதம் செய்ய தயாரா என கேள்வி எழுப்பினார். 
 
கச்சத்தீவை மீட்பதற்கு நெய்தல் படை அனுப்பவும் கப்பற்படை அனுப்பவும் என்றெல்லாம் நாங்கள் கூறவில்லை எனவும் அறிவியல் பூர்வமாக தொழில்நுட்ப ரீதியில் எப்படி பெற முடியும் என பார்ப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
 
இத்தனை ஆண்டுகளாக சுப்பிரமணியன் சாமி போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை 50 ஆண்டுகளுக்குப் பிறகு இதை வெளியே கொண்டு வந்துள்ளதாகவும் இவ்வளவு காலம் அவர்கள் ஏன் ஆர்டிஐ போடவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.  சீமானுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை என்று அண்ணாமலை விமர்சித்தார்.
 
கள்ளு கடை திறக்க வேண்டும் என வெள்ளை அறிக்கை ஆளுநரிடம் கொடுத்துள்ளதாகவும் கள்ளுக்கடைகளை திறப்போம் என்பதில் உறுதியாகவும் உறக்கமாகவும் சொல்வோம் எனவும் மக்களை குடிக்காதீர்கள் என சொல்லப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 
மேலும் டாஸ்மாக்கை மூட வேண்டும் கள்ளு கடையை திறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.