வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By VM
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (21:22 IST)

திமுகவின் ஆறு அரசியல் வாரிசுகள்... அப்பாக்களின் செல்வாக்கு அறுவடையாகுமா?

வாரிசு அரசியல் என்பது இப்போது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக மாறி விட்டது.  திமுகவில் எப்போதும் உண்டு.  அந்த வகையில் இந்த முறை 6 வாரிசுகளுக்கு மக்களவை தேர்தலில் சீட் கொடுத்துள்ளார். 


திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரி  கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுகிறார். திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி  கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூரில் போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னையில்  போட்டியிடுகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் தயாநிதி மத்திய சென்னையில் போட்டியிடுகிறார். திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வடசென்னையில் போட்டியிடுகிறார். 
 
அப்பா அரசியலில் இருந்தால் மகன் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்வதே தப்பு. எங்களுக்கு அரசியலுக்கு வர முழு உரிமை இருக்கு என அரசியல் வாரிசுகளின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. வாரிசு அரசியலுக்கு முக்கிய காரணம் ,  தனது ஊரில், தனது தொகுதியில் தான் கஷ்டப்பட்டு கட்டமைத்த செல்வாக்கை பிறருக்கு விட்டு கொடுக்க அரசியல் தலைவர்கள் விரும்புவதில்லை. அது மட்டும் இல்லாமல் தன் தந்தையை போல் தனக்கும் செல்வாக்கு வேண்டும் என அரசியல் வாரிசுகள் விரும்புவது காரணம். 
 
இப்போது மக்களவை தேர்தலில் போட்டியிடும் அரசியல் வாரிசுகளை மக்கள் ஏற்பார்களா நிராகரிப்பார்களா என்பது   மே 23 ம்தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்து விடும்.